எம்.பி-க்கு போட்டியிடும் 14 எம்பிபிஎஸ் – களமிறக்கிய நாம் தமிழர் கட்சி

29 0

நாம் தமிழர் கட்சி 14 மருத்துவர்கள் அடங்கிய வேட்பாளர்களுடன் மக்களவை தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னம் பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், மக்களவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர் தேர்வானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இதுவரை 38 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்களும் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் மார்ச் 23 அல்லது 24-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்களில் 14 பேர் மருத்துவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர்களுடன் 4 பேராசிரியர்கள், 5 பொறியாளர்கள் என பல்வேறு பட்டதாரி வேட்பாளர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவர்களும், ஆசிரியர்களும் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக அமையும் நிர்வாகிகள் கருதுகின்றனர்.