விக்டோரியா, ரன்தெனிகல நீர்தேக்கங்களில் நீர் வற்றுகிறது

21 0

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக விக்டோரியா மற்றும் ரன்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் எட்டு மில்லி மீற்றர் நீர் ஆவியாவதாக மத்திய மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.தினேஷ் சுமனசேகர கூறுகிறார்.

மினிப்பே திட்டத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்வதற்காக நீர் பெறும் பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் 88 வீதம் தற்போதுள்ள போதிலும், நீர் வற்றும் நிலை கானப்படுவதால்  எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளில் நீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நீரை பயன்படுத்தும் போது  செய்யும் போது முறையான நீர் முகாமத்துவத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.