எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க நிதி அமைச்சு விரைவில் தலையிடாவிட்டால் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் தமது பிரச்சினைகளுக்கு அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

