பல்கலை மாணவர்களுடன் சென்ற பஸ் மற்றொரு பல்கலைக்கழகத்தின் மதிலை மோதியது!

18 0

ஹோமாகம டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்று  இன்று (14)  காலை விபத்துக்குள்ளானது.

தேசிய வணிக முகாமைத்துவ (NSBM) பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த பல்கலைக்கழகம் அருகே பஸ் கட்டுப்பாட்டையிழந்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதிலின் ஒரு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது பஸ்ஸில் பல்கலைக்கழக மாணவர்கள் இருந்த போதிலும், விபத்தில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.