இறுதி கட்டத்தில் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு: ஓரிரு நாளில் அறிவிப்பு

27 0

பாஜக கூட்டணியில் தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஓபிஎஸ் அணி, அமமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில், பாமக, தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதற்காக, மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் சென்னைக்கு வந்தனர். பாமக, தேமுதிகவையும் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், கூட்டணி, தொகுதி பங்கீடு தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி, தொகுதி பங்கீடுகளை இறுதி செய்து அறிவிப்புகளை பாஜக வெளியிட இருக்கிறது.

இந்நிலையில் கிண்டியில் பாஜக குழுவை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன்கூறும்போது, ‘தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேஜ கூட்டணி வளர்ந்து கொண்டிருக்கிறது.

இதனுடைய முழு வடிவம் வெற்றி வடிவமாக அமையும்’ என்றார். சரத்குமார் கூறும்போது, ‘தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக முன்னோடிகள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

பாஜகவில் இணைந்தது பற்றி விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். எந்த ஒரு எதிர்மறையான கருத்துக்களுக்கும் நான் செவி சாய்க்க போவது இல்லை’ என்றார்.