சூட்டுக்கு இலக்கான சந்தேக நபர் பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த நபர் என பொலிஸார் தெரிவிப்பு!

110 0

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரையில் தேரர் ஒருவரைச் சுட்டு கொன்ற சந்தேக நபர் பல குற்றச் செயல்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி சூடு , கொள்ளை போன்ற போன்ற பல குற்றச் செயல்களுடன் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என  பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சந்தேக. நபரை அத்தனகல்ல யாதவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தைக் கண்டுபிடிக்கச் அழைத்துச் சென்றபோது அவர்  தப்பிச் செல்ல முற்பட்ட  நிலையில் ,பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் உயிரிழந்தமை தெரிந்த்தே.