எல்பிட்டிய துப்பாக்கிப் பிரயோகம் : காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழப்பு!

112 0

எல்பிட்டிய, பிடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய, பிடிகல பகுதியில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் மூவர் காயமடைந்திருந்தனர்.

இவ்வாறு காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து எல்பிட்டி – பிட்டிகல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.