மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்-09.03.2024 Düsseldorf.

332 0

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்- வடமாநிலம், வடமத்திய மாநிலம் மற்றும் மத்திய மாநிலம் 09.03.2024 Düsseldorf

யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம் நிறைவாகக் கடந்த 09.03.2024 சனிக்கிழமை அன்று வடமாநிலம், வடமத்திய மாநிலம் மற்றும் மத்திய மாநிலம் மூன்று மாநிலங்களுக்குரிய பூப்பந்தாட்டப் போட்டி Düsseldorf எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராகிய திரு. முத்துவேலு இராசா அவர்களும் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராகிய செல்வி அபிநயா ஜெயா அவர்களும் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் மத்திய மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராகிய திரு. வித்தகன் ஆனந்தராசா அவர்களும் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் மத்திய மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராகிய செல்வன் பிரவிந் பராபரன் அவர்களும் பொதுச்சுடரினை ஏற்றிவைத்த பின்னர் அகவணக்கத்தோடு பூப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கியது.

யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரது நேர்த்தியான நடுவர்கள்
எமது மாவீரத் தெய்வங்களை தமது நெஞ்சங்களில்ச் சுமந்து மிகக் கண்ணியத்தோடும் பணிவோடும் கடமையாற்றியமை பாராட்டுக்குரியது.

நடுவர்களது தீர்வுக்கமைய அதிக புள்ளிகளைப் பெற்று, 2024 ஆம் ஆண்டுக்கான வடமாநில, வடமத்திய மாநில மற்றும் மத்திய மாநில மாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டியில் Meerbusch தமிழாலயம் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து Bochum தமிழாலயம் இரண்டாம் இடத்தினையும் Hamm தமிழாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்தோடும் மாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டம் இனிதே நிறைவு பெற்றது.