போதைப்பொருள் வளையமைப்பை சேர்ந்தவரும் குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமானகுடு சலிந்து என்பவரை இம் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (11) இவர் பாணந்துறை பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதிவான் சம்பிக்க ராஜபக்ஷ இவ்வாறு உத்தரவிட்டார் .

