ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைவரும் பழைய விடயங்களை மறந்து எங்களுடன் இணையுங்கள்

30 0

பழைய விடயங்களை மறந்துவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைவரும் எங்களுடன் இணைந்துகொள்ள முன்வர வேண்டும்.

நாங்கள அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் வங்குராேத்து அடைந்திருந்த நாட்டை மீண்டும் மீட்பதற்கு 5வருடங்கள் வரை செல்லும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால்  குறுகிய காலத்தில் எங்களால் முடியுமாகி இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

குருணாகலை குலியாபிடி நகரசபை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கஷ்டமான காலத்திலேயே மக்கள் தற்போது இருந்து வருகின்றனர். அதனால் குறுகிய அரசியல் பிரச்சினைகளை மறந்து நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல அனைவரும் முன்வரவேண்டும் என்ற செய்தியை தெரிவிப்பதற்கே இந்த இடத்துக்கு வந்தேன். வங்குராேத்து நிலையில் இருந்த நாடு தற்போது அதில் இருந்து மீள ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் மே. ஜூன் மாதமளவில் கடன் பெற்ற நாடுகளுடன் கைச்சாத்திட இருக்கிறோம். இதன் மூலம் எமது நாடு வங்குராேத்து அடைந்த நாடு என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

அத்துடன் இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இருந்த நிலை அனைவருக்கும் தெரியும். என்றாலும் தற்போது அந்த நிலையை எங்களால் மாற்றியமைக்க முடியுமாகி இருக்கிறது. அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில இருந்து 10ஆயிரம் ரூபா கிடைக்கிறது. அதேபோன்று 24இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வேசும நிவாரணம் வழங்க இருக்கிறோம்.

இந்த குடும்பங்களுக்கு எதிரவரும் சித்திரை புத்தாண்டில் 20 கிலாே அரிசி வழங்க இருக்கிறோம். 20 இலட்சம் பேருக்கும் காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோன்று கொழும்பில் 50ஆயிரம மாடி வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவோம். இவ்வாறு படிப்படியாக நிவாரணம் வழங்கும் புரட்சியை ஏற்படுத்துவோம்.

மேலும் பெண்களை வலுவூட்டும் வகையில் புதிய சட்டமூலங்களை எதிர்வரும் காலங்களில் அனுமதிக்க இருக்கிறோம். அதற்கு தேவையான ஆணைக்குழுவும் அமைப்போம். இதன் மூலம் பெண்களை பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அதனால் நெருக்கடியான நிலையில் எனக்கு ஆதரவளிக்க மொட்டு கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

அத்துடன் 2020 தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டது. அதன் காரணமாக நாங்கள் தேர்தலில் தோல்வியடைந்தோம். என்றாலும் தேர்தலில் நாங்கள் உண்மை விடயத்தை மக்களுக்கு தெரிவிப்போம். இதன் மூலம் சில காலம் செல்லும் போது எங்களுக்கு அரசாங்கத்தை அமைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என நான் தெரிவிதேன். ஆனால் எனது கருத்துக்கு சிலர் இணங்கவில்லை. அதனால் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டனர். ஆனால் நாங்கள் எமது தேர்தல் பிரசாரத்தில் பல உண்மைகளை தெரிவித்தோம். அதாவது 2023ஆகும் போது நாடு 7ஆயிரம் பில்லியன் ரூபாவை இழக்கும் அதேநேரம் 3ஆயிரம் பில்லியன் ரூபா எமக்கு தேவைப்படும் என தெரிவித்தோம். அதுவே தற்போது ஏற்பட்டது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தெரிவித்த விடயங்களையும் திரையில் காட்சிப்படுத்தினார். அத்துடன் காலி முகத்திடலுக்கு  அனுர குமார மற்றும் சஜித் பிரேமதாச சென்றபோது அவர்களை அங்கு தாக்க முற்பட்ட காட்சிகளையும் திரையிட்டு பழைய சம்பவங்களையும் ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.

மேலும் நாடு வங்குராேத்த அடைந்தபோது காலி முகத்திடலில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வர வில்லை. சஜித். அனுர அவர்கள் முன்வராதது தவறு இல்லை. ஏனெனில் காலிமுகத்திடலுக்கு அன்று செல்ல முடியாமல் போன இவர்களுக்கு எப்படி நாட்டை பாெறுப்பேற்று நடத்த முடியும்.

அதனால் யாரும் முன்வராத நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ் என்னை பொறுப்பேற்குமாறு தெரிவித்தார். அதன் பிரகாரமே நான் பொறுப்பேற்றேன். அதன் பின்னர் ஜுலை 9 காலிமுகத்திடல் ,இணைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர் இதன்போது அவர் என்னை விரட்டவா அல்லது கோத்தாபய ராஜபக்ஷவை விட்டுவதற்கா வந்தார்கள் என தெரியாது. எனக்கும் பிரதமர் பதவியை விட்டு செல்லுமாறு தெரிவித்தார்கள்.

என்றாலும் கோத்தாபய ராஜபக்ஷ் சென்ற பின்னர் பதில் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அனைவரும் என்னுடன் இணைவார்கள் என்றே நான் நினைத்தேன். அவ்வாறு அவர்கள் இணைந்தால் பொதுத் தேர்தலுக்கு சென்று நாங்கள் அனைவரும் அரசாங்கம் அமைத்து நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்லவே நினைத்தேன்.

ஆனால் அவர்கள் என்னுடன் இணைந்து செல்ல மறுத்தார்கள். ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் நான் இருப்பதால் என்னுடன்இணைந்து செயற்பட முடியாது என்றார்கள். ஆனால் தற்போது மஹிந்தவுடன் இருந்த ஜீ.எல். நாலக்க கொடஹேவா அவர்களுடன் இருக்கிறனர்.  ஐக்கிய மக்கள் சக்தியில்  ஐக்கிய தேசிய கட்சிக்கு இடமில்லை.. நாலக்க கொடஹேவாவின் ஆலாேசனையின் பிரகாரமே அங்கும் எல்லாம் இட்ம்பெறுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டு வந்திருக்கிறார்கள் அவர்களுடன் கலந்துரையாட எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தேன். அரச நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ்டி சில்வா இதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் நாலக்க கொடஹேவாவின் ஆலாேசனையை கேட்டு. இந்த சந்திப்புக்கு வரமுடியாது என எதிர்கட்சி எனக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.

எனவே இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கத்தில் இருந்து நாங்கள் விடுபட்டு நாட்டை முன்னேற்ற அனைவரும் முன்வர வேண்டும். அதனால் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பழைய விடயங்களை மறந்து, மீண்டும் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டும். சிலர் எம்முடன் ஏற்கனவே இணைந்துகொண்டுள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொதுளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என்றார்.