புதுக்குடியிருப்பில் பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு

122 0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாகத் தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்ட வாகனத்தின் சாரதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (09) மாலை  இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் பட்டா ரக வாகனத்தில் தேக்கு மரகுற்றிகளை கடத்துவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைதானார் .

இந்தநிலையில் 13 தேக்கு மர குற்றிகள் பொலிஸாரால்  கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.