எல்பிட்டியவில் கொலை செய்யப்பட்ட யுவதி : சகோதரியின் கணவருடன் வாழ்ந்து வந்தாராம்!

97 0

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் 17 வயது யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை  வெளியிட்டுள்ளனர்.

குறித்த யுவதி  தல்கஹாவத்தை, கரந்தெனிய பிரதேசத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில்  தனது மூத்த சகோதரியின் கணவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த யுவதியும் சந்தேக நபரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எல்பிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக யுவதி தனது தாய் வீட்டுக்குத்  திரும்பியுள்ளார்.

மூத்த சகோதரியின் கணவரின் அச்சுறுத்தல் தொடர்பில் கடந்த 4ஆம் திகதி கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளுக்காக கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்குச்  சென்று கொண்டிருந்தபோது, சந்தேக நபர் மேலும் பலருடன் முச்சக்கர வண்டியில் வந்து குறித்த யுவதியைக் கடத்திச் சென்றுள்ளார்.

யுவதியைக்  கடத்திச் சென்ற சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய மற்றும் கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.