வறட்சியான காலநிலையால் நீர் விநியோகத்தில் தடைகள்

97 0

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தில் தடைகளை எதிர்நோக்கியுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தினசரி தண்ணீர் தேவை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளது.

தேசிய நீர் வழங்கல்  சபையின் பிரதிப் பொது முகாமையாளர்  அனோஜா களுஆராச்சி குறிப்பிட்டதாவது, சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் வழங்குவதற்கு அல்லது மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இது தொடர்பாக முறைப்பாடுகளைத் தெரிவிக்க 1939 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பத்தலே மற்றும் பியகம நீர் நீரேற்று நிலையங்களுக்குள் உப்பு உட்புகுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக உப்புத் தடுப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும்  அவர் மேலும் குறிப்பிட்டார்.