13,500 சிகரெட்டுக்களுடன் இரு இராணுவ சிப்பாய்கள் கைது!

112 0

சட்டவிரோதமாக கொண்டு சென்ற 13,500 சிகரெட்டுக்களுடன் இரு இராணுவ சிப்பாய்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இந்த சிகரெட்டுக்களை கொழும்பிலிருந்து அம்பாறைக்கு சட்டவிரோதமாக கொண்டுசென்றபோது அம்பாறை பிரதேசத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.