ஒட்டுசுட்டான் சிவன் கோவில் இராஜகோபுரத்தில் ஏற்பட்ட மாற்றம்: மகிழ்ச்சியில் பக்தர்கள்

24 0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் உள்ள தான்தோன்றிசுவரர் ஆலயத்தின் இராஜகோபுரத்தில் பொருத்தமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இராஜ கோபுரத்தின் அடியில் பாதணிகளை கழற்றிவிட்டு ஆலயத்திற்குள் செல்லும் நிலையினால் இராஜகோபுர முன்னரங்கு பார்ப்பதற்கு அசௌகரியமாக இருந்து வந்தது.

இந்நிலையில், இராஜ கோபுரத்தின் முன்றலில் பாதணிகளை கழற்றாது அவற்றை உரிய முறையில் ஆலயத்தின் யாதேனும் ஒரு பகுதியில் கழற்றிவிடும்படி ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஆன்மிக ஈடுபாட்டாளர்கள் நீண்ட நாட்களாக கோரி வந்திருந்தனர்.

இராஜகோபுரத்தில் முன்பகுதியில் பெட்டி வடிவில் இரும்பு கம்பிகளை நிலைநிறுத்தி சுற்றி தடையொன்றை அமைத்துள்ளனர்.

அதனுள் தூய்மையான சூழலை பேணிவருகின்றனர். ஆலயத்திற்குள் செல்லும் போது தங்கள் பாதணிகளை இராஜகோபுரத்தின் அடியில் கழற்றிவிட்டுச் செல்லும் நிலையில்லை என பக்தர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றிசுவரர் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. அதன் போது ஆலயத்திற்கு சென்றிருந்தார்கள் தங்கள் பாதணிகளை இராஜகோபுர வாசலில் கழற்றிவிட்டு ஆலயத்திற்குள்ளே சென்றிருந்தனர்.

ஒட்டுசுட்டான் சிவன் கோவில் இராஜகோபுரத்தில் ஏற்பட்ட மாற்றம்: மகிழ்ச்சியில் பக்தர்கள் | Otusuttan Shiva Temple

மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது பாதணிகளை காணவில்லை.எங்கு என நீண்ட நேரம் தேடியே பின்னர் கண்டெடுத்ததாக தன் அன்றைய அனுபவங்களை பாடசாலை ஆசிரியர் ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

பாதணிகளை எடுத்து அருகிலுள்ள பாடசாலையின் மதிலோடு போட்டுவிட்டு அது தொடர்பில் தகவல்களை வழங்கும்படி எந்த ஏற்பாடுகளும் அன்று அவர்கள் செய்யாது இருந்தனர்.

எனினும் இன்றுள்ள இராஜகோபுரத்திற்கு முன்னுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு பாராட்டப்பட வேண்டியது என் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீசுவரர் ஆலயத்தின் இராஜகோபுரத்தினைச் சூழ குறிப்பிட்டளவு தூரத்தினை தூய்மையாக பேணுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.

 

 

 

ஒட்டுசுட்டான் சிவன் கோவில் இராஜகோபுரத்தில் ஏற்பட்ட மாற்றம்: மகிழ்ச்சியில் பக்தர்கள் | Otusuttan Shiva Temple

இராஜகோபுரத்தினைக் கண்ணுற்ற போது ஆலயத்தின் மீதான ஈர்ப்பு மேலோங்கிவிடும். இறைபக்தி மேலோங்கும்.மனதில் பக்தியுணர்வு விருத்தியாகிவிடும் என ஆன்மிக ஈடுபாட்டாளர் ஒருவர் தன் உணர்வுகளையும் பதிவிட்டிருந்தார்.

மேலும், ஆலய நிர்வாகத்தினர் இன்னும் சிறாப்பாக செயற்பட முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.