இந்திய துணைத் தூதுவர் யாழ். பொது நூலகத்திற்கு விஜயம்

17 0

இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு விஜயம்மொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தினை அவர் நேற்றுமுன் தினம் (07.03.2024) மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் யாழ். நூலகத்தின் இந்திய நூல்கள் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டதுடன் கலாநிதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மார்பளவு சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

அத்துடன் தூதரகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 75,000 புத்தகங்களை கொண்டு கற்றல் மற்றும் கலாச்சார பரிமாற்ற உணர்வை வளர்க்கிற இந்நூலகத்திற்கு மேலும், இது தொடர்பாக துணை தூதரகத்தின் உதவியை கோரி, யாழ். பொது நூலகம் பிரெய்லி பிரிவை நிறுவுவதற்கான முன்மொழிவை முன்வைத்துள்ளது.இந்திய துணைத்தூதுவர் இந்த முயற்சியைப் பாராட்டியதுடன், நூலகத்தின் பயன்பாட்டையும் அணுகலையும் மேலும் மேம்படுத்துவதாகவும், சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எந்த உடல் வரம்புகள் இருந்தாலும் அவர்களுக்கு அறிவு கிடைக்கச் செய்யும் என்றும் கூறியுள்ளார்.