காலி வீதி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தைக்கு அருகாமையில் உள்ள சந்தியில் காலி நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

சுமார் 4 அடி விட்டம் கொண்ட பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே பாதையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பஸ்கள் மற்றும் ஏனைய கனரக வாகனங்கள் கடல் மார்க்கமான வீதி ஊடாக கொழும்பு நோக்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

