ஹரக்கட்டா தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம்!

96 0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக்கட்டா தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.