பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொரளையில் நேற்று (06) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றைய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அவரும் மற்றுமொருவரும் அளுத்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

