கிராந்துருகோட்டை , ஊவாபரணகம பகுதிகளில் புதையல் தோண்ட முயன்ற 11 பேர் கைது!

104 0

கிராந்துருகோட்டை மற்றும் ஊவாபரணகம உள்ளிட்ட பிரதேசங்களில் புதையல் தோண்ட முயன்றதாக கூறப்படும்  11 பேர் புதையல் தோண்ட பயன்படுத்திய  உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளனர்.

கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதையல் தோண்ட முயன்று கைது செய்யப்பட்டவர்கள் மஹியங்கனை , கம்பஹா , மல்வத்துஹிரிபிட்டிய , கல்பொருயாய உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்த 33,38, 45 மற்றும் 46 வயதுடையவர்களாவர்.

இந்நிலையில் ஊவாபரணகம பிரதேசத்தில் புதையல் தோண்ட முயன்று கைது செய்யப்பட்டவர்கள் குபுக்வெல , வெலிமடை , மஸ்பன்ன , கெப்பெட்டிபொல , நுகதலாவ உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்த 36, 39, 33,  32, 42, 31 மற்றும் 29 வயதுடையவர்களாவர்.

கிராந்துருகோட்டை மற்றும் ஊவாபரணகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.