‘ஹரக் கட்டா’ வை தப்பிக்க வைக்க முயற்சித்த பொலிஸ் சார்ஜென்ட் கைது

305 0

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தகவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தப்பிக்க வைக்க முயற்சித்த குற்றச்சாட்டில்  பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர்  பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 36 வயதுடைய பொலிஸ் சார்ஜென்ட் மாத்தறை பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றுபவர்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (TID) நேற்று புதன்கிழமை (மார்ச் 06) கைது செய்துள்ளது.