பனாமா முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடை

12 0

பனாமாவின் முன்னாள் ஜனாதிபதி ரிக்கார்டோ மார்ட்டினெலி  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

பணச்சலவை குற்றச்சாட்டில் அவருக்கு கடந்த வருடம் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையே இதற்குக் காரணம்.

71 வயதான கோடீஸ்வர வர்த்தகரான ரிக்கார்டோ மார்ட்டினெலி, 2009 முதல் 2014 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

அவரை கைது செய்யுமாறு பனாமா அதிகாரிகள் கடந்த மாதம் உத்தரவிட்டனர். அதையடுத்து நிக்கரகுவா தூரகத்தில்  மார்ட்டினெல்லி தஞ்சம் புகுத்தார்.

இதேவேளை,  பனமாவில் மே 5 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மார்ட்டினெல்லி முற்பட்டார்.

இந்நிலையில் மார்ட்டினெலி மீதான சிறைத்தண்டனை மேன்முறையீட்டில் நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து அவர் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என  பனமா தேர்தல்கள் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.