2016 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பேச்சு வாரத்தைகளின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு இந்திய துணைதூதுவரிடம் வலியுறுத்தினோம் என தேசிய மீனஒத்துழைப்பு இயக்கத்தின் பணிப்பாளர் கேமன்குமார தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களையும் தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தினால் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் பாதிக்கப்படுகின்ற இலங்கை மீனவர்களின் குறிப்பாக வடக்கு மீனவர்களின் உரிமைகளை வலியுறுத்தி இன்றைய தினம் போராட்டம் நடத்தினோம்.
வடக்கு மீனவர்கள் ஆர்வமாக கலந்துக்கொண்டனர். வடக்கு ஆளுநரிடம் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி கடிதம் ஒன்றை கையளித்தோம். அதேபோன்று இந்திய தூதரகத்திலும் கடிகத்தை கையளித்துள்ளோம். இதன் பின்னர் கலந்துரையாடினோம். ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலாகவே இது அமைந்தது.
யாழில் உள்ள இந்திய தூணைதுதரக அதிகாரிகள் எமது கோக்கையை ஏற்றுக்கொண்டனர். 2016 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பேச்சு வாரத்தைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். குறிப்பாக இழுவைப்படகு மீன்பிடி முறை உடனடியாக நிறுத்தவே வலியுறுத்தினோம்.
இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க முடியும் என்பதனையே வலியுறுத்தினோம். வடக்கு மீனவர்களின் ஒன்றிணைந்த கோரிக்கையாக இது உள்ளது. எனவே இந்திய தரப்பு எமது கோரிக்கையை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

