பெலியத்தையில் ஐவர் படுகொலை ; மேலும் ஒருவர் கைது

123 0

பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபர் காலி தொடந்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடையவர்.

இவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பெலியத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.