சட்டவிரோதமான முறையில் தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற கெப் வண்டியொன்று கருவலகஸ்வெவ பிரதேசத்திலுள்ள சதுப்பு நிலத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச் செல்வதாக நவகத்தேகம வனவிலங்கு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்களை பின் தொடர்ந்துள்ளனர் .
இவர்களிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் கெப் வண்டியில் வேகமாகப் பயணித்த போது கெப் வண்டி சதுப்பு நிலத்தில் சிக்கிய நிலையில் சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர் .
பின்னர் பொலிஸாரின்.விசாரணையின் போது புத்தளம் பிரதேசத்தில் வசிப்பவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இதே கெப் வண்டியில் 30 சட்டவிரோத மரக்குற்றிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் .

