குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருக்கான தேர்தல்: நிக்கி ஹாலேவுக்கு முதல் வெற்றி

28 0

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார்? என்பதற்காக தேர்தல் அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படும். ஒட்டு மொத்தமாக அதிக செல்வாக்கு பெரும் நபர் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

தற்போது டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப்-க்கு ஆதரவு அதிகமாக இருந்த போதிலும், நிக்கி ஹாலே பின் வாங்காமல் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் வாஷிங்டன் தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிராம்பிற்கு எதிராக நிக்கி ஹாலே பெறும் முதல் வெற்றி இதுவாகும். தொடர்ந்து வெற்றிபெற்று வந்த டொனால்டு டிரம்பிற்கு இது முதல் தோல்வியாக அமைந்துள்ளது.

வாஷிங்டன் ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு நிக்கி ஹாலே 63 சதவீத வாங்குகள் வாங்கியுள்ளார். 2020 தேர்தலின்போது வாஷிங்டனில் டிம்பிற்கு எதிராக ஜோ பைடன் 92 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கொலம்பியா, மிச்சிகன், நெவாடா, தெற்கு கரோலினா, லோவா போன்ற இடங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 244 பிரதிநிகள் ஆதரவும், நிக்கி ஹாலேவுக்கு 43 பிரதிநிதிகள் ஆதரவும் உள்ளன.