கொழும்பில் பாரிய போதைப்பொருள் சிக்கியது

130 0

கொழும்பில் ஐஸ் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது 9 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன் சந்தைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கொழும்பு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ​​இந்த போதைப்பொருள் கையிருப்பு மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.