செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் சேதமடைந்த கப்பல் மூழ்கிவிட்டது

188 0

சில வாரங்களுக்கு முன்னர்செங்கடல் பகுதியில்  ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலிற்கு உள்ளான ருபிமர் என்ற கப்பல் பலத்த சேதங்கள் காரணமாக கடலில் மூழ்கியுள்ளது.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் காரணமாக முற்றாக அழிக்கப்பட்ட முதலாவது கப்பல் இதுவென்பதுகுறிப்பிடத்தக்கது.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாக ஆசியா மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்கான சரக்கு மற்றும் எரிபொருள் கப்பல்கள்  செங்கடல் ஊடாக பயணம் செய்வது பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பல கப்பல்கள் இந்த கடற்பாதையை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன.

இந்த நிலையில் ருபிமார் கப்பல் மூழ்கியுள்ளமை குறிப்பிட்ட பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் காப்புறுதி கட்டண அதிகரிப்பிற்கு வழிவகுக்கலாம் என  அச்சம் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிக்கலாம் மத்திய கிழக்கிற்கு மனிதாபிமான உதவிகளுடன் கப்பல்கள் செல்வது பாதிக்கப்படலாம்.

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலின் படத்தை வெளியிட்டுள்ள அமெரிக்கா இதன் காரணமாக சூழல் பாதிப்புகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

கப்பலில் 21000 மெட்ரிக் தொன் பெறுமதியான  அமோனியம் பொஸ்பேட் உரங்கள் காணப்பட்டன இதனால் செங்கடல் பகுதிக் பாதிப்புகள் ஏற்படலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.