கரந்தெனிய பிரதேசத்தில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு பிள்ளையின் தந்தையான 42 வயதுடையரே உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி கரந்தெனிய பொலிஸாரால் கைது செய்ப்பட்டுள்ளார்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறைப்பாடு கிடைக்கப்பபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

