யானை தந்தத்தை வெட்டி மறைத்து வைத்திருந்தவர் கைது

115 0

அம்பலாந்தோட்டை பகுதியில் யானையின் 4 அடி நீள தந்தத்தைக்  கோடரியால் வெட்டி மறைத்து வைத்திருந்த ஒருவர்  நேற்று வெள்ளிக்கிழமை  (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அம்பலாந்தோட்டை  பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய  தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டியாகல வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.