சந்தேகத்திற்கு இடமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோரவல பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு நீக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோட்டார் சைக்கிளானது ஏதேனும் குற்றச்செயல் ஒன்றுக்காக பயன்படுத்தப்பட்டு பின்னர் ஆதாரத்தை அளிக்க இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த மோட்டார் சைக்கிள் கடந்த 26ஆம் திகதி குருந்துக்கஹதக்ம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று (28) உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் சந்தேக நபர்கள் இவ்வாறு மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்திருக்கலாம் என பொலிஸார் மேலும் சந்தேகிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றை தீ வைத்து எரித்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.