ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை விரைவில் பெறும் என்று வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை விரைவில் பெறும் என்று வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு கவின்சிலில் தற்போது அமெரிக்கா,சீனா,ரஷ்யா,பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதில், இந்தியா, பிரேசில், மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளை புதிதாக சேர்க்க வேண்டும் என்ற குரல் நீண்ட காலமாக எழுந்து வருகின்றது
இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் இவ்விவகாரம் தொடர்பாக நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ,”ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு இந்தியாவுக்கு அனைத்துத் தகுதிகளும் இருக்கிறது. ஏற்கெனவே, இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்திலுள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ஆகிய 4 நாடுகள் இந்தியாவுக்கு தங்களது ஆதரவைத் வெளிப்படையாக தெரிவித்துள்ளன. மேலும், மற்றொரு உறுப்பு நாடான சீனா, இந்தியாவிற்கு பகிரங்கமாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை” எனக் கூறினார்.
மேலும், ” இம்முறை இல்லாவிட்டாலும், அடுத்த முறை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை நிச்சயம் பெறும் என்று நம்புகிறேன். ஏற்கெனவே, நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு இருக்கும் பொறுப்புகள், உரிமைகள், வீட்டோ அதிகாரம் ஆகியவற்றை புதிதாக உறுப்பினர் அந்தஸ்து பெறும் நாடுகளுக்கும் வழங்க வேண்டும். இதில் பழைய உறுப்பினர், புதிய உறுப்பினர் என்று பாகுபாடு பார்க்கக் கூடாது.” எனவும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகள் மட்டுமல்லாது தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்றே இந்தியா விரும்புவதாகவும், இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுத்து வருவதாகவும் சுஷ்மா தெரிவித்தார்.

