அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கு: புலன் விசாரணை அதிகாரி இன்று நேரில் ஆஜராக உத்தரவு

46 0

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரித்த வில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம், அவர்கள் இருவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.

அந்த உத்தரவை மறுஆய்வு செய்யும்விதமாக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்துவழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாகவிசாரணைக்கு வந்தது. அப்போது தங்கம் தென்னரசு மனைவியின் தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார்ஆஜராகி, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

வழக்கின் புலன் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட கூடுதல் ஆதாரங்களின்அடிப்படையில் போலீஸார் வழக்கைமுடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதன்படி இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதை மறுஆய்வு செய்யஅவசியமே இல்லை என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவிதாக்கல் செய்த மனுவுக்கு மேல் விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ள புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் அவர் பி்ப்.29 (இன்று) பிற்பகலில் நேரி்ல் ஆஜராக வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.