மொனராகலையில் பஸ் விபத்து : சிறுவர்கள் உள்ளிட்ட 36 பேர் காயம்

156 0

மொனராகலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்த்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த போது விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிறுவர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.