இலஞ்சக் குற்றச்சாட்டுக்குள்ளான இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!

166 0

போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள வழங்குவதற்காக 10,000 ரூபாவை இலஞ்சமாகப்  பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இத்தபான பொலிஸ் நிலையத்தின்   பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். 

களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இவர்கள் இருவரையும் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.