அதிவேக வீதியில் லொறியால் மோதப்பட்டு இருவர் பலி!

139 0

அதிவேக வீதியின் குருந்துக்கஹதக்ம பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த அதிவேக வீதிப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்களே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து குடிநீர் ஏற்றிச்சென்ற லொறி ஒன்றினால் மோதப்பட்டே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.