மாலதி கிண்ணத்திற்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி, டென்மார்க்

45 0

கடந்த  17-02-2024 அன்று மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் இரண்டாம் லெப். மாலதி அவர்களின் நினைவாக நடாத்தப்பட்டுவரும் மாலதி கிண்ணத்திற்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பாகக் கோசன்ஸ் நகரில் நடைபெற்றது. அன்றைய தினம் நடைபெற்ற சுற்றுப்போட்டியில் Grindsted,  Fredericia, Viborg, Århus,  Holbæk, Ikast, Horsens, Nyborg, Aabenraa, Hobro ஆகிய மாலதி தமிழ்க் கலைக்கூடங்களைச் சேர்ந்த அணிகளுடன் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் முன்னாள் மாணவர்களும் நண்பர்களும் இணைந்து விளையாடும் அணிகளான Herning, Horsens, Arrow’s pile,  Sjælland Malathy,  Mixed Team, Crew 74 wonders, OTSC, GTFC, Aarhus Legend, Aarhus SK, NTSK, ST Boys,   TFC Fredericia,  Dream Team, Sønderborg, Hobro ஆகிய அணிகளும் விளையாடின. பெண்களுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியும் சிறப்பாக நடைபெற்றது.

இச்சுற்றுப்போட்டியானது அகவணக்கத்துடன் ஆரம்பமாகி இரு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. எல்லா அணிகளையும் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் விளையாடினார்கள். இப்போட்டியில் விளையாடிய வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் பதக்கம் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது. முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. இச்சுற்றுப்போட்டிக்கு பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தந்து வீரர்களையும் வீராங்கனைகளையும் உற்சாகப்படுத்தினர்.

வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் பற்றிய விபரம் வருமாறு:

2012 – 2014 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கான அணியில்
முதலாம் இடம்:  Aabenraa மாலதி தமிழ்க் கலைக்கூடம்
இரண்டாம் இடம்: Ikast மாலதி தமிழ்க் கலைக்கூடம்
மூன்றாம் இடம்: Helsingborg மாலதி தமிழ்க் கலைக்கூடம்

2010 – 2011 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கான அணியில்

முதலாம் இடம்:   Horsens மாலதி தமிழ்க் கலைக்கூடம் A
இரண்டாம் இடம்:  Helsingborg மாலதி தமிழ்க் கலைக்கூடம்
மூன்றாம் இடம்:   Holbæk மாலதி தமிழ்க் கலைக்கூடம்

2006 – 2007 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கான அணியில்

முதலாம் இடம்:  Grindsted மாலதி தமிழ்க் கலைக்கூடம் Yellow
இரண்டாம் இடம்: Grindsted மாலதி தமிழ்க் கலைக்கூடம் Red
மூன்றாம் இடம்:    Sjælland மாலதி தமிழ்க்  கலைக்கூடம்

பெண்களுக்கான அணியில்
முதலாம் இடம்:  Horsens
இரண்டாம் இடம்:  Sjælland மாலதி தமிழ்க் கலைக்கூடம் A
மூன்றாம் இடம்:  Mixed team

Senior அணியில்
முதலாம் இடம்: Hobro Blak
இரண்டாம் இடம்: Sønderborg
மூன்றாம் இடம்: NTSK

கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.