பேருவளை பாடசாலையில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருட்டு!

118 0

பேருவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

அதிபர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்ட வார விடுமுறைக்காகப் பாடசாலை மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (25)  கூட்டமொன்றிற்காகப்  பாடசாலை உதவியாளரால் பாடசாலை திறக்கப்பட்டுள்ளது .

இதன்போது  ஆசிரியர் ஓய்வறையின் கதவு திறந்து கிடப்பதைக் கண்ட உதவியாளர்  உள்ளே சென்று பாரத்தபோது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இதனையடுத்து பாடசாலை உதவியாளர்  அதிபருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு கொரிய அரசாங்கத்திடம் இருந்து இந்த கணினிகள் உதவியாகப் பெறப்பட்டதாகவும், ஒவ்வொரு கணினியின் மொத்த பெறுமதி 60,000 ரூபா எனவும் அதிபர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது .