அத்திவாரம் தோண்டிக் கொண்டிருந்தவர் மீது மண்மேடு வீழ்ந்ததில் உயிரிழந்தார்!

132 0

கண்டி, அனிவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குச் சுவரை நிர்மாணிப்பதற்காக    அத்திவாரம்  தோண்டிக் கொண்டிருந்த  ஒருவர் மீது மண்மேடு வீழ்ந்ததில் அவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, மண்மேடு சரிந்து அவர் மீது வீழ்ந்த நிலையில் அவரை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

திகன ரஜவெல்ல பிரதேசத்தில் வசித்த ஈ.எம்.பி.டபிள்யூ. ஏகநாயக்க 49 வயதுடையவர் என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.