வடமாகாண சபை அவைத் தலைவர் மற்றும் பிரதி அவைத் தலைவர் ஆகியோர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர், சபைக்குத் தலைமை தாங்கலாம் என, வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் அமர்வு, இன்று (06) இடம்பெற்றது. இதன்போது, வடமாகாண சபை அவைத்தலைவர் மற்றும் பிரதி அவைத்தலைவர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் சபையினை தலைமை தாங்கலாம் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த சபை அமர்வின் போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சுகயீனம் காரணமாக வருகை தரவில்லை. அத்துடன், பிரதி அவைத்தலைவரும் சபையில் இல்லாமையால் சபை ஆரம்பமாவதற்கு தாமதானமை குறிப்பிடத்தக்கது. –

