திக்வெல்ல பிரதேச செயலகத்துக்கு அண்மித்த கடலில் நீராடிய நால்வரில் இருவர் அலையில் அள்ளுன்டு செல்லப்பட்ட நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் 170 பேர் சுற்றுலாவுக்குச் சென்றிருந்தபோது குறித்த பகுதியில் கடற்கரைக்கு அருகில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் அவர்களில் நால்வர் நீராடச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடை, ரஸ்ஸகல உவெல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

