காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களுக்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருப்பதாகக் கூறி ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் உட்பட மூத்த ஜேர்மன் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தரணிகள் குழு ஒன்று வழக்குத் தொடர்ந்துள்ளது.
யார் யார் மீது வழக்கு?
இஸ்ரேல் காசாவில் செய்துவருவது இனப்படுகொலை என்று கூறும் அந்த சட்டத்தரணிகள் குழு, ஜேர்மன் சேன்ஸலர் மட்டுமின்றி, வெளியுறவுத்துறை அமைச்சரான அன்னாலேனா பேர்பாக், பொருளாதாரத்துறை அமைச்சர் ராபர்ட் ஹேபெக், நிதி மந்திரி கிறிஸ்டியன் லிண்ட்னர் மற்றும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில் உள்ள சட்டத்தரணிகள், பாலஸ்தீன ஜேர்மன் புலம்பெயர்ந்த கல்வியாளரான நோரா ரகாப் (Nora Ragab) உட்பட, காசா பின்னணி கொண்ட இரண்டு பாலஸ்தீன குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆவர்.
அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதைத் தொடந்து, இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 29,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதையே இந்தக் குழு இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ளதுடன், ஜேர்மன் அமைச்சர்கள் அதற்கு ஆதரவாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

