கொலை முயற்சிக்கு உதவிய மேலும் இருவர் கைது!

139 0

மோதர – லெல்லம பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்திற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மேலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் 3 இளைஞர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் 19 வயது மற்றும் 28 வயதுடைய இருவர் மோதரை மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் வைத்து நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 15 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் வசிக்கும் இவர்களிடம் 5 கிராம் 800 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதர பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்