குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை பிரிவில் கிருமி தொற்று காரணமாக அதிகளவிலான நோயாளர்கள் மரணமடைந்துள்ளதால் இந்த சிகிச்சை பிரிவு தற்காலியமாக மூடப்பட்டுள்ளது.
இந்த மரணங்களுக்கான காரணம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இது தொடர்பிலான விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினால் இதுவரையில் 5 இற்கும் மேற்பட்ட மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்ற இரசாயனங்களினால் இந்த மரணங்கள் ஏற்படுவதாக வைத்தியசாலையின் வேதியியலாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று குருணாகல் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

