மட்டுவில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு ; 4 பேர் மீது வழக்குத் தாக்கல்

156 0

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் விற்பனை செய்த ஹோட்டல்கள், பேக்கரிகள் சுற்றிவளைக்கப்பட்டன.

இதன்போது, மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் நோய்  தொற்றை உண்டாக்க கூடியவாறு உணவை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த உணவக உரிமையாளர்களிடம் இருந்து பெரும்தொகையிலான உணவுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

04 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (22) தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒவ்வொருவருக்கும் தலா 10,000/- தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், உணவக உரிமையாளர்களிற்கு நீதிவானினால் கடுமையாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ஏனையவர்களிற்கான வழக்கு 26.02.2024 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் நீதிவானின் கட்டளைக்கமைய அழிக்கப்பட்டது.