கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் இவ்வருட திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பயணமாகியுள்ளனர்.
அந்த வகையில், இன்று வெள்ளிக்கிழமை (23) 40 படகுகளில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக கச்சதீவு தேவாலயத்துக்கு சென்றுள்ளனர்.
இன்று மாலை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் திருவிழாவானது நாளை சனிக்கிழமை (24) காலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு பங்கின் பங்குத்தந்தையர்களின் தலைமையில் விசேட திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
மேலும், இந்த திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் எவரும் வருகை தரவில்லை என தேவாலயத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





