தனிப்பட்ட கருத்துக்களை மூடிமறைக்கவேண்டிய அவசியமில்லை

138 0

ஒருவர் தான் குறிப்பிட்டகட்சியில் அங்கம் வகிக்கின்றார் என்பதற்காக தனது தனிப்பட்ட கருத்துக்களை மூடிமறைக்கவேண்டியதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனநாயக்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறை நீக்கத்திற்காக தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் நிலையிலேயே ராஜிதசேனராட்ண தனது முகநூலில் இந்த கருத்தினை பதிவுசெய்துள்ளார்.

நீங்கள் ஒரு கட்சியின் உறுப்பினர் என்பதற்காகவே அல்லது கட்சியில் பதவிகளை வகிப்பதற்காகவோ உங்களின் சுதந்திரமான தனிப்பட்ட கருத்துக்களை மறைத்துவைக்கவேண்டியதில்லை எங்கள் கொள்கை மனச்சாட்சிக்கு பொருந்தக்கூடிய கட்சியென்று எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்களின் சில அறிக்கைகள் கட்சியின் நிலைப்பாடுகளிற்கு முரணாக காணப்படலாம் என தனது முகநூலில்  தெரிவித்துள்ள  ராஜிதசேனரட்ண சிலநேரங்களில் கட்சியின் நடவடிக்கைகளுடன் எங்கள் கொள்கைகள் மோதலாம் இதன் அர்த்தம் நாங்கள் கட்சிக்கு துரோகமிழைக்கின்றோம் என்பதல்ல அல்லது கட்சி எங்களிற்கு துரோகமிழைக்கின்றது என்பதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்கட்சியொன்றில் மில்லியன் கணக்கான உறுப்பினர்களும் வலுவான அரசியல் தலைவர்களும்இருக்கலாம் கட்சிக்குள் பெரும் கருத்துவேறுபாடுகள் முரண்பாடுகள் இருக்கலாம் எந்த அரசியல் இயக்கமும் முரண்பாடு இல்லாமல் முன்னேறுவதில்லை கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் தனிப்பட்ட முரண்பாடுகளை தோற்றுவிப்பதில்லை எனவும் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

மனிதர்களாக நாங்கள் முதிர்ச்சியடையவேண்டும் கட்சியில் உணர்ச்சிமி;க்கவர்கள் இருக்கலாம் நம்பிக்கையிழந்தவர்கள் இருக்கலாம் இதனை எங்கள் கட்சி தலைவர்கள் புரிந்துகொள்வார்கள் என எதிர்பார்க்;கின்றேன் எனவும் ராஜிதசேனரட்ண தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.