ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் சிறுவர்கள் உயிரிழப்பது தாங்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும் ஆபத்து

187 0

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் சிறுவர்கள் உயிரிழப்பது தாங்கமுடியாத அளவிற்கு அதிகரிக்கவுள்ளது  எனயுனிசெவ் தெரிவித்துள்ளது.

மிகமோசமான நெருக்கடி காரணமாக தாங்கமுடியாத அளவிற்கு சிறுவர்கள் உயிரிழப்பது  காணப்படுகின்றது இது மேலும் அதிகரிக்கலாம் என   யுனிசெவ் எச்சரித்துள்ளது.

காசாவில் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் 90 வீதமானவர்கள்  கடும்பட்டினி நிலையில் சிக்குண்டுள்ளனர் என யுனிசெவ் தலைமையிலான அமைப்புகள்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேயளவானவர்கள் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் 70வீதமானவர்கள் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கான பகுதியாக காணப்படும் ரபாவில் போசாக்கின்மை ஐந்து வீதமாக காணப்படுகின்றது  வடகாசாவில் போசாக்கின்மை 15 வீதமாக காணப்படுகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகாசாவை தங்களது முற்றுகைக்குள் இஸ்ரேலிய படையினர்வைத்துள்ளதும் இங்கு பல மாதங்களாக மனிதாபிமான உதவிகள் செல்லாததும் குறிப்பிடத்தக்கது.

காசாவில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர்இது ஒரு வீதத்திற்கும் குறைவாக காணப்பட்டது.

தடுக்ககூடிய சிறுவர் மரணம் பெருமளவில் காசாவில் நிகழப்போகின்றது இது காசாவில் ஏற்கனவே தாங்க முடியாத அளவிலான விதத்தில் அதிகரித்து காணப்படும் சிறுவர் மரணங்களை மேலும் அதிகரிக்கப்போகின்றது என யுனிசெவ் அதிகாரி டெட்சலிபான் தெரிவித்துள்ளார்.