கொழும்பு பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் விபத்தில் பலி

46 0

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி விரிவுரையாளரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

பத்தரமுல்லை 10 பத்தமக விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இன்று (21) மாலை 5 மணிக்கு சமயச் சடங்குகளுடன் நடைபெற்று தலவத்துகொட பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் உதவி விரிவுரையாளரான 24 வயதுடைய லக்மினி போகமுவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் விக்கிரமசிங்கபுரவிலிருந்து வேலைக்குச் செல்வதற்காக பாதசாரி கடவைக்கு அருகில் வீதியின் மறுபுறம் சென்ற போது பத்தரமுல்ல பெலவத்தையிலிருந்து தலவத்துகொட நோக்கிச் சென்ற லொறியின் முன்பகுதியில் மோதி வீதியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இரண்டு பதக்கங்களையும் புலமைப்பரிசில்களையும் பெற்று சிறந்த மாணவியாக தெரிவாகியுள்ளார்.

இவர் கொழும்பு ஆனந்த பாலிகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி விசேட திறமையை வெளிப்படுத்திய மாணவி என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

“எல்லாவற்றிலும் வல்லவனான நீ எப்படி எங்களை இப்படித் தனியே விட்டுச் சென்றாய்?” என்று சகோதர, சகோதரிகள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.