பதியத்தலாவ பொலிஸ் பிரிவில் வாகன சேவை நிலையத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹரஸ்கல – மஹாஓய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 16ஆம் திகதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என நேற்று சனிக்கிழமை (17) பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின்போது இறந்தவர் பணிபுரிந்த வாகன சேவை நிலையத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் அவரது செருப்பு காணப்பட்டதால், கிணற்றை சோதனை செய்ததில் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பதியத்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

